நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலை விரிவாக்கத்திற்காக கடைகளை இடிப்பதில் பாரபட்சம் காட்டப்படவில்லை: கோலாலம்பூர் மேயர்

கோலாலம்பூர்:

சாலை விரிவாக்கத்திற்காக டேசா பண்டானில் உள்ள ஒன்பது வணிகக் கடைகளை இடிக்கும் திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறப்படுவதை கோலாலம்பூர் மேயர் Datuk Seri Maimunah Mohd Sharif மறுத்துள்ளார்.

சாலை மிகவும் குறுகலாகவும், நெரிசலாகவும் இருப்பதாக குடியிருப்பாளர்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, இந்தச் சாலை விரிவாகத் திட்டம் 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது என்று அவர் விளக்கமளித்தார்.

கோலாலம்பூர் கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர் கூட்டத்தில் மேயர் இவ்வாறு கூறினார்.

தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வுகளைக் கோலாலம்பூர் மாநகர மன்றம் மதிப்பாய்வு செய்ததாகவும், பின்னர் நடைபாதைகள் உள்ளிட்ட புதிய சாலை வடிவமைப்புகளை முன்மொழிந்ததாகவும் மேயர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் மாநகர மன்றம் குடியிருப்பாளர்களுடன் நான்கு முறை சந்திப்பு நடத்தியதாகவும், கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தொடர்ந்து திட்டத்தைத் திருத்தியதாகவும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset