நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகனைக் தான் கொன்றதாக ஒப்புக் கொள்ளுமாறு போலீசார் கட்டாயப்படுத்தினர்: ஜெய்ன் ராயனின் தாயார்

பெட்டாலிங் ஜெயா: 

கடந்த ஆண்டு குழந்தையின் மரணம் தொடர்பான விசாரணையின் போது, தனது மகனைத் தாம் கொன்றதாக வாக்குமூலம் அளிக்க போலீசார் கட்டாயப்படுத்தியதாக ஜெய்ன் ரயான் அப்துல் மதீனின் தாயார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

30 வயதான இஸ்மானிரா அப்துல் மனாஃப், தடுப்புக்காவல் விண்ணப்பத்திற்காக மாஜிஸ்திரேட் முன் கொண்டு வரப்பட்டபோது குற்றத்தை ஒப்புக்கொள்ள 'அழுத்தம்' கொடுக்கப்பட்டதாகக் கூறினார்.

தனது வழக்கறிஞர் ஹரேஷ் மகாதேவனால் தலைமை விசாரணையின் போது, மாஜிஸ்திரேட் ஜாஃப்ரான் ரஹீம் ஹம்சா முன் வாக்குமூலம் அளிக்க அதிகாரி தன்னை கட்டாயப்படுத்தியதாக இஸ்மானிரா கூறினார்.

கொலை செய்ததை ஒப்புக்கொள்ளும்படி போலீசார் தன்னை கட்டாயப்படுத்தி மிரட்டியதாகவும் இஸ்மானிரா தெரிவித்தார்.

'safe house'-இல் நடந்ததாகக் கூறப்படும் விசாரணை அமர்வின் போது, தான் மறுத்ததால் அதிருப்தி அடைந்த அதிகாரிகள் தன்னை அடித்து மிரட்டியதாக இஸ்மானிரா மேலும் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

 

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset