
செய்திகள் மலேசியா
புகைமூட்டத்தால் சிலாங்கூர், மேற்கு ஜொகூர் கடுமையாகப் பாதிப்பு
ஷா ஆலம்:
இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சிலாங்கூர், ஜொகூரின் மேற்குப் பகுதி எல்லை தாண்டிய புகை மூட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
தீபகற்பத்தின் மேற்கு கடற்கரைக்குப் புகையைக் கொண்டு வரும் தற்போதைய காற்றின் திசைக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட பகுதியில் அதிக எண்ணிக்கையிலான வெப்பத் திட்டுகள் இருப்பதை செயற்கைக்கோள் படங்களின் மீதான ஆய்வு உறுதிப்படுத்துகிறது என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை, மெட்மலேசியாவின் துணைத் தலைமை இயக்குநர் அம்புன் டிண்டாங் கூறினார்.
உண்மையில், செயற்கைக்கோள் படங்கள் மூலம் இதைக் கண்டறிய முடியும். ஏனெனில் செயற்கைக்கோள் படங்கள் சம்பந்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை உட்பட வெப்பத் திட்டுகள் அல்லது தீ பரவியப் பகுதிகள் பற்றிய தகவல்களை வழங்க முடியும்.
செயற்கைக்கோள் படங்கள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறியவும் உதவுகின்றன என அவர் சொன்னார்.
இருப்பினும், புகை மூட்டத்தின் இயக்கத்தைக் கணிக்க காற்றின் திசை மற்றும் வேகத்தின் அடிப்படையில் முன்னறிவிப்பு மாதிரிகளை நாங்கள் சார்ந்துள்ளோம்.
சுமத்ராவில் அதிக எண்ணிக்கையிலான வெப்பப் புள்ளிகளை செயற்கைக்கோள் படங்கள் கண்டறிந்துள்ளன.
அதே நேரத்தில் புகையின் நகர்வு தென்மேற்கிலிருந்து சீராக உள்ளது. அதாவது காற்று அதன் மூலத்திலிருந்து நம் நாட்டை நோக்கி, குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரை நோக்கிச் செல்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, கடந்த வார இறுதியிலிருந்து இன்று வரை நாங்கள் புகை மூட்டப் பிரச்சனையை எதிர்நோக்கி வருகிறோம் . இருப்பினும், தற்போது அது குறையத் தொடங்கியுள்ளது என்று மீடியா சிலாங்கூர் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
தீயை கட்டுப்படுத்தாவிட்டாலும் காற்று அதே திசையிலிருந்து தொடர்ந்து வீசினாலும் இந்த நிலைமை தொடரும் என்று அவர் எச்சரித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm