
செய்திகள் மலேசியா
இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்களை போக்க இரு தரப்பினரும் மனம் விட்டுப் பேச வேண்டும்: பேராசிரியர் அப்துல் சமத்
கோலாலம்பூர்:
சிம்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் பேராசிரியர் முனைவர் அப்துல் சமத் தலைமையில் அலசல் அரங்கம் நடைபெற்றது.
கோலாலம்பூர் செய்யது உணவக மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்று தலைப்பிடப்பட்டிருந்தது.
சிம்ஸ் தலைவர் எம் இசட் கனி பேசுகையில் இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பல்வேறு தடைகள் பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மஸ்ஜித் இந்தியா இமாம் டாக்டர் செய்யது இப்ராஹிம் இளைஞர்கள் சந்திக்கும் அரைகூவல்களை இஸ்லாமியப்பார்வையில் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய ஏபிசி உணவக உரிமையாளர் அய்யூப் கான் தற்போது சமூகத்தில் நிலவும் பல்வேறு கலாச்சார சீரழிவுகளை பட்டியலிட்டார். லட்சக்கணக்கில் செலவழித்து செய்யப்படும் திருமணங்களில் மலிந்துவிட்ட அனாச்சாரங்களை அவர் கடுமையாக சாடினார். இதிலிருந்து நாம் மீள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
வழக்கறிஞர் ஃபரிதா பேகம் பேசுகையில் பிள்ளை வளர்ப்பது அன்னையின் கைகளில் மட்டுமல்ல, அதில் தந்தைக்கும் பொறுப்புண்டு. இளைஞர்கள் வளர்ந்து வாழ்க்கையில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் பெண்களை மட்டும் குறைசொல்லாதீர்கள் என்றார்.
இறுதியாக பேசிய அஜீஸ் ஜமருல் கான் இன்றயை இளைஞர்கள் வாயிப்புகளைத் தேட வேண்டும். தொழிலில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கான கதவுகள் திறந்துள்ளன. தொழில்நுட்ப அறிவும் வர்த்தக அறிவும் இணைந்தால் அவர்கள் சவால்களை எளிதில் கடந்துபோக முடியும் என்றார்.
தலைமை உரையாற்றிய பேராசிரியர் அப்துல் சமது இன்றைய இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்பது எளிதில் கடந்து வரக்கூடியதுதான். சிறிது பொறுமையம் திட்டமிடலும் அவசியம். இதில் முக்கியமான அம்சம் தலைமுறை இடைவெளிதான். அந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்றால் பெற்றோரும் பிள்ளைகளும் அமர்ந்து பேச வேண்டும். விவாதிக்க வேண்டும். அத்தகைய உரையாடல்தான் ஆரோக்கியமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
மண்டபம் நிறைந்திருந்த நிகழ்ச்சிக்கு சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm