நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

400 ரிங்கிட்டில் போலி கடப்பிதழ்; 10 நிமிடங்களில் தயாராகும்: குடிநுழைவுத் துறை அம்பலம்

கோலாலம்பூர்:

போலி கடப்பிதழை உருவாக்க 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் பட்சத்தில் அந்த கடப்பிதழ்களுக்கு 400 ரிங்கிட் கட்டணமும் விதிக்கப்படுகிறது.

இதனை குடிநுழைவுத் துறை உறுதிப்படுத்தியது.

இன்று அதிகாலை கெப்போங்கில் போலி ஆவணங்களை தயாரிக்கும் தொழிற்சாலையாக பயன்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் நூற்றுக்கணக்கான போலி  கடப்பிதழ்களை குடிநுழைவுத் துறை கண்டுபிடித்தது.

கோலாலம்பூர் குடியேற்றத் துறை அமலாக்கப் பிரிவு நடத்திய ஓப்ஸ் செர்காப் சோதனையின் போது 20 வயதுடைய இரண்டு வங்காளதேச ஆடவர்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் நூற்றுக்கணக்கான போலி கடப்பிதழ்களை தயாரிக்கும் பணியின் மும்முரமாக ஈடுப்பட்டிருந்தனர்.

வங்காளதேசம், இந்தியா, நேபாளம், இந்தோனேசியா, பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த போலி கடப்பிதழ்கள் செய்து தரப்பட்டுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும் அந்நிய தொழிலாளர்கள் மலேசியாவில் பணிபுரிய தேவையான வெளிநாட்டு தொழிலாளர் மருத்துவ கண்காணிப்பு, தேர்வு நிறுவனம் (ஃபொமேமா) தொடர்பான பல ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இங்கு தயாரிக்கப்பட்டும் போலி கடப்பிதழ்களுக்கு தலா 400 ரிங்கிட் வசூலிக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

போலி ஆவணங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதைக் காட்டும்படி கேட்டபோது,

இரண்டு வங்காளதேச ஆடவர்களும்  சுமார் 10 நிமிடங்களில் போலி கடப்பிதழை நகலை உருவாக்கி முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset