
செய்திகள் மலேசியா
10 நிமிடங்களில் தயாரிக்கப்படும் கடப்பிதழ் 400 ரிங்கிட்டிற்கு விற்பனை: குடிநுழைவு துறை
கோலாலம்பூர்:
கெப்போங்கில் போலி ஆவணங்களை செயலாக்குவதற்கான 'தொழிற்சாலையாக' பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு வீட்டில் இன்று அதிகாலை குடிநுழைவு துறை நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான போலி கடப்பிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கோலாலம்பூர் குடிநுழைவு துறை அமலாக்கப் பிரிவு நடத்திய Ops Serkap சோதனையின் போது, கும்பலின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 20 வயதுடைய இரண்டு வங்காளதேச ஆண்கள், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் நூற்றுக்கணக்கான போலி கடப்பிதழ்களின் நகல்களைச் செயலாக்குவதில் மும்முரமாக இருந்தனர்.
அங்குக் கிடைத்த கடப்பிதழ்களின் அடிப்படையில், தயாரிக்கப்பட்ட போலி கடப்பிதழ்களில் வங்கதேசம், இந்தியா, நேபாளம், இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
தொழிற்சாலையில்' தயாரிக்கப்படும் ஒவ்வொரு போலி கடப்பிதழுக்கும் RM400 வசூலிப்பதாக நம்பப்படுகிறது.
போலி ஆவணங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதைக் காட்டும்படி கேட்டபோது, இரண்டு வங்கதேச ஆண்களும் சுமார் 10 நிமிடங்களில் போலி கடப்பிதழில் நகலை உருவாக்கி முடித்தனர்.
அனைத்து சந்தேக நபர்களும் தற்போது குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 55D இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm