நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசா,  மேற்கு ஆசியாவில் நீதியை நிலைநாட்டும் முயற்சியில் மலேசியா பின்வாங்காது: பிரதமர்

கோலாலம்பூர்:

காசா, மேற்கு ஆசியாவில் நீதியை நிலைநாட்டும் முயற்சியில்  மலேசியா ஒருபோதும் பின்வாங்காது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

அமெரிக்கா பழிவாங்கும் நோக்கில் அதிக  வரிகளை விதிக்க காரணமாக இருந்தாலும்,

காசா, ஈரான் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளில் நீதியை நிலைநாட்ட மலேசியா தொடர்ந்து குரல் கொடுப்பதில் இருந்து பின்வாங்காது.

காசாவில் நடந்த இனப்படுகொலையை நாடு கடுமையாக கண்டித்ததன் காரணமாக அமெரிக்கா அதிக வரிகளை விதிப்பது நியாயமற்றது.

இருப்பினும், அடுத்த மாதம் வரை மலேசியாவுக்கு இன்னும் நேரம் இருப்பதாகவும், கட்டணப் பிரச்சினையை இணக்கமாக தீர்க்க முடியும்.

ஆகஸ்ட் வரை மலேசயாவுக்கு நேரம் உள்ளது, பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

நான் எந்த அனுமானங்களையும் செய்ய விரும்பவில்லை. தாய்லாந்து, வியட்நாம்,  கம்போடியாவை விட மலேசியாவின் வரிகள் குறைவாக உள்ளது.

ஆக இவ்விவகாரத்திற்கு மலேசிய உரிய தீர்வை கானும் என்று டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset