நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மரங்கள் பராமரிப்பு தொடர்பாக மொத்தம் 1,744 புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன: ஜலிஹா முஸ்தாஃபா

கோலாலம்பூர்:

மரங்கள் பராமரிப்பு தொடர்பாகக் கோலாலம்பூர் மாநகர மன்றம், டிபிகேஎல் இதுவரை மொத்தம் 1744 புகார்களைப் பெற்றுள்ளதாகப் பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜலிஹா முஸ்தாஃபா தெரிவித்தார்.

கிளைகள் முறிந்த நிலையில் 355 மரங்கள் இருப்பதாகவும் 348 மரங்கள் முழுமையாக சாய்ந்து விழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

31,815 மரங்களில் கிளைகளை வெட்டும் பராமரிப்புப் பணிகளை டிபிகேஎல் மேற்கொண்டதாகவும், 7,453 மரங்கள் வெட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அபாய நிலையில் இருக்கும் 160 மரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆய்வைத் தொடர்ந்து, 142 மரங்களின் கிளைகள் வெட்டப்படும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது, 18 மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்று அவர் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset