நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடையாள ஆவணங்கள் இல்லாத 8575 மாணவர்கள் ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகளில் பயில்கின்றனர்: ஃபட்லினா சிடேக் 

கோலாலம்பூர்:

இவ்வாண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நாடு முழுவதும் சுமார் 8575 மாணவர்கள் முறையான அடையாள ஆவணங்கள் இல்லாமல் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகளில் கல்வி பயின்று வருவதாக கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

மார்ச் 11, 2009 தேதியிட்ட கல்வி அமைச்சின் சுற்றறிக்கை எண் 1/2009: ஆவணங்கள் இல்லாத மலேசிய குடிமக்களின் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுமதித்தல் என்ற சுற்றறிக்கையின் கீழ் இந்தக் குழந்தைகளின் சேர்க்கை அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

இந்தச் சுற்றறிக்கை அடையாள ஆவணங்கள் இல்லாத குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க அனுமதி வழங்குகிறது.

பெற்றோரில் ஒருவர் கட்டாயம் மலேசியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இம்மாணவர்கள் பள்ளிகளில் சேர அனுமதி வழங்கப்படுவதாக என்று அவர் கூறினார்.

மாற்றுக் கற்றல் மையங்கள் உட்பட ஆரம்ப, இடைநிலைப்பள்ளிகளில் கல்வி பயிலும்அகதிகள் அல்லது நாடற்ற குழந்தைகள் குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் குறித்து கண்டறிய விரும்பிய சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானின் கேள்விக்கு ஃபட்லினா நாடாளுமன்றத்தில் இவ்வாறு பதிலளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset