நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய தின கொண்டாட்ட அறிமுக தினம், ஜாலூர் கெமிலாங் கொடியை பறக்கவிடும் பரப்புரை: ஜூலை 27ஆம் தேதி மூவாரில் விமரிசையாக நடைபெறவுள்ளது 

கோலாலம்பூர்: 

மலேசியர்களால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 31ஆம் தேதியும், செப்டம்பர் 16ஆம் தேதியும் தேசிய தின கொண்டாட்டம், மலேசியா தினம் என்று கொண்டாடப்படுகிறது. 

ஆகஸ்ட் 31ஆம் தேதியானது ஆங்கிலேயர்களிடமிருந்து மலாயா விடுதலை பெற்று ஒரு சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டது 

அதேபோல, செப்டம்பர் 16ஆம் தேதியானது சபா, சரவாக் ஆகிய இரு மாநிலங்கள் இணைந்து மலேசியா கூட்டரசை உருவாக்கிய மலேசிய தினமாகும். 

தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் விதமாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தேசிய தினமாக ஆகஸ்ட் 31ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த ஒற்றுமையின் அடித்தளமாக நமது தேசிய கொடியான ஜாலூர் கெமிலாங் கொடியைப் பறக்கவிடும் பரப்புரைகளும் நாடு தழுவிய நிலையில் பிரம்மாண்டமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில், இவ்வாண்டு மலேசியா தனது 68ஆவது சுதந்திர தினத்தையும் 62ஆவது மலேசியா தினத்தையும் கொண்டாடவிருக்கிறது. மலேசிய தகவல், தொடர்பு அமைச்சுடன் தேசிய தகவல் துறையும் இணைந்து இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 

இந்த MAJLIS PELUNCURAN BULAN KEBANGSAAN மற்றும் KEMPEN KIBAR JALUR GEMILANG நிகழ்ச்சியானது எதிர்வரும் ஜூலை 27ஆம் தேதி ஜொகூர் மாநிலத்தில் உள்ள மூவார், டத்தாரான் தஞ்சோங் மாஸ் எனும் பகுதியில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. 

நாட்டு மக்கள் மத்தியில் தேசிய கொடியை பறக்கவிடும் பரப்புரையை மேலும் மேலோங்க செய்ய ஒரு வீட்டிற்கு ஒரு ஜாலுர் கெமிலாங் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். 

தேசிய கொடிகளை மலேசியர்கள் முறையாக பறக்கவிடவும் இது தொடர்பான விளக்கவுரைகளும் பொதுமக்கள் JABATAN PENERANGAN MALAYSIA அகப்பக்கம் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

நாட்டு பற்று விதைக்கும் தேசிய கொடியான ஜாலூர் கெமிலாங் கொடியை பறக்கவிடுவோம், சுதந்திர மாதத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்போம்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset