நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியல் புகார் வழக்கை தற்காலிகமாக நிறுத்த அனுமதி பெற்றார் பிரதமர் அன்வார்

புத்ராஜெயா 
தமது முன்னாள் ஆராய்ச்சி அதிகாரி முஹம்மட் யூசொஃப் இரவுத்தர் தாக்கல் செய்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கை தற்காலிகமாக நிறுத்த கோரி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த மனு இன்று முறையீட்டு நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டது.

மூன்று நீதிபதிகள் தலைமையிலான முறையீட்டு நீதிமன்ற அமர்வு, இது “சிறப்பு சூழ்நிலைகளை” கொண்டதால் வழக்கை இப்போதைக்கு நிறுத்துவது சரியானது என உறுதிச் செய்தது.

அன்வார், இதற்கு முன் உயர் நீதிமன்றத்தில், "ஒரு பிரதமருக்கு எதிராக ஒருவர் வழக்கு தொடர முடியுமா?" என 8 அரசியலமைப்புச் சந்தேகங்களை ஆய்வுச் செய்ய நீதிமன்றத்தை நாடினார்.

ஆனால் அந்த கோரிக்கையை நீதிபதி ரோஸ் மாவார் ரோசைன் நிராகரித்தார். அவர், அன்வாரின் கோரிக்கை யூகத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், சட்டத்தின் பிரிவு 84-இன் கீழ் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் கூறினார்.

இந்த முடிவுக்குப் பின்னர், வழக்கின் விசாரணையை நிறுத்தக் கோரி அன்வார் தாக்கல் செய்த மனு இப்போது நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset