நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேய் பெங் ஹொக் மரணம் தொடர்பான கடிதத்தைக் குடும்பம் நிராகரித்தது

கோலாலம்பூர்:

தேய் பெங் ஹொக் மரண வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விளக்கும் நோக்கில், சட்டத்துறை  (Attorney-General's Chambers, AGC) அனுப்பிய கடிதத்தை அவர்களின் அவரின் குடும்பத்தினர் நிராகரித்தனர்.

அத்துடன், மரணத்துக்குப் பிறகு கடந்த 16 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கின் பின்னணியை விளக்குவதற்கும், தீர்ப்பின் அடிப்படையில் சட்ட குறிப்புகளை எடுத்துரைப்பதற்காக கடிதம் அனுப்பப்பட்டதாக பொதுச் சட்டதுறை வழக்கறிஞர் டத்தோ மொஹ்ட் துஸூகி மொக்தார் தெரிவித்தார்.

“இந்த கடிதத்தின் முழுமையான உள்ளடக்கம் வெளியிட இயலாது. இருப்பினும், நீதிமன்ற தீர்ப்பு, சாட்சிய சுமை மற்றும் தொடர்புடைய சட்டவிதிகளை எளிய வடிவில் விளக்கும் முயற்சி அது. ஆனால், அந்த விளக்கத்தை குடும்பம் ஏற்க மறுத்துவிட்டது,” என்று அவர் கூறினார்.

தேய் பெங் ஹொக், 2009ம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், ஷா ஆலமில் உள்ள பிளாசா மசாலாம் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். அவரது மரணம் தொடர்பாக முதலில் விசாரணை நடந்து, எந்த வகையான மரணம் எப தெளிவாக முடிவுக்கு வராத காரணத்தால் "தெளிவில்லா மரணம்" என முடிவு கூறப்பட்டது.

இதற்கிடையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்  தலைவரான தான்ஸ்ரீ அசாம் பாக்கி, தேய் பெங் ஹொக் குடும்பத்திடம் மன்னிப்புக் கோரியதோடு, அவரது மரணம் ஒரு வருத்தமான சம்பவம் என கூறினார். மேலும், அவரது குழந்தையின் கல்விக்கான நன்கொடை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சட்டத்துறை அலுவலகம் அனுப்பிய கடிதம் சம்பந்தப்பட்ட குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டுள்ள செய்தி, இந்த வழக்கில் நீதி தொடர்பான பணி இன்னும் முடிவடைகவில்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset