
செய்திகள் மலேசியா
பழைய உலோகப் பொருள் கடத்தல் கும்பல் சோதனையில் 332.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன: எம்ஏசிசி
புத்ராஜெயா:
பழைய உலோகப் பொருள் கடத்தல் கும்பல் சோதனையில் இதுவரை 332.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி இதனை உறுதிப்படுத்தினார்.
பழைய உலோகக் கடத்தல் கும்பல் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி ஐந்து மாநிலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனைகளில் 165 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிலங்கள், 1.9 மில்லியன் மதிப்புள்ள கார்கள், 15.5 மில்லியன் மதிப்புள்ள வீடுகள், 740,000 ரிங்கிட் மதிப்புள்ள சொகுசு கார்கள் முடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 149.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட மொத்த சொத்துகளின் மதிப்பு 332.5 மில்லியன் ரிங்கிட்டாகும்.
மேலும் நிறுவன இயக்குநர்கள், இரண்டு அமலாக்க முகவர்கள், நிறுவனங்களின் உரிமையாளர்கள், கணக்கு மேலாளர்கள், ஃபார்வர்டிங் முகவர்கள் உட்பட 27 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எம்ஏசிசி சட்டப் பிரிவுகள், தேசிய வருமான வாரிய சட்டங்கள் உட்பட பல பிரிவுகளின் கீழ் விசாரணைகள் துரிதமான நடந்து வருவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
July 31, 2025, 1:23 pm
தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்
July 31, 2025, 1:00 pm