நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எச்ஆர்டி கோர்ப்-பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சையத் அல்வி நியமனம்

கோலாலம்பூர்: 

மனிதவள மேம்பாட்டு கழகம், எச்ஆர்டி கோர்ப்-பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சையத் அல்வி முஹம்மத் சுல்தான் நியமிக்கப்பட்டுள்ளார். 

இவரின் நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் எச்ஆர்டி கோர்ப் அறிக்கையில் தெரிவித்தது. 

51 வயதான சையத் அல்வி நிதி சேவை, வங்கி தொழில்நுட்பம், மேலாண்மை ஆலோசனை உட்பட பல துறைகளில் 27-ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். 

மேலும், சையத் அல்வியின் தலைமையில் நாட்டின் மனிதவள மேம்பாட்டுத் துறை இன்னும் வலுப்படும் என்றும் இத்துறையில் இலக்கவியல் மாற்றங்களைக் கொண்டு வந்து சிறப்பாக செயல்படும் என்றும் எச் ஆர்டி கோர்ப் தனது அறிக்கையில் கூறியுள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset