நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுபாங்ஜெயாவில் போதைப் பொருள் விருந்து: 38 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

சுபாங்ஜெயா:

தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து போதைப் பொருள் விருந்து நடத்தியதாக நம்பப்படும் 38 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுபாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமத் இதனை உறுதிப்படுத்தினார்.

சுபாங் ஜெயா போலிசார் நடத்திய அதிரடி சோதனையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான அனைவரும் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும் 18 வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.

மேலும் போதைப் பொருளை விநியோகித்த 4 இளைஞர்களையும் போலிசார் கைது செய்துள்ளனர்.

6.5 கிராம் கஞ்சாவும், 1.5 கிராம் கேட்டமின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

கைதான  அனைவரும் தடுப்புக் காவலில் உள்ளனர். விசாரணை நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset