நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சி முன்னெடுக்கலாம்: டத்தோஶ்ரீ அன்வார்

புத்ராஜெயா: 

நாடாளுமன்றத்தில் தமக்கு எதிரான  நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டால், அதை அரசு தடுக்காது என பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இன்று, நாடாளுமன்றம் கூடும் முதல்நாளே அந்த தீர்மானம் வரட்டும். எனக்கு எதிராக பெரும்பான்மை இருந்தால், நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். அதுதான் நம்முடைய ஜனநாயக முறை" என அன்வார் குறிப்பிட்டார்.

சட்டப்படி இல்லாமல் அரசை கவிழ்க்க முயற்சிப்பது,
நாட்டின் நிலைத்தன்மைக்கும், அரசமைப்புக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என்பதையும் அனைத்து தரப்பினரும் நினைவில் கொள்ள வேண்டுமென்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகர் தான்ஸ்ரீ ஜொஹாரி அப்துலிடம் அத்தகைய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டால் அவற்றை இடையூறின்றி நடத்த அனுமதிக்க கூறியுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset