
செய்திகள் மலேசியா
தலைமை நீதிபதி நியமனத்தில் கடைசி நேர மாற்றமா?: பிரதமர் அன்வார் மறுப்பு
புத்ரா ஜெயா:
தலைமை நீதிபதி பதவிக்கான பரிந்துரையில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகவல் பொய்யானது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மேலும், நியமனம் தொடர்பான பரிந்துரை பேரரசர் சுல்தான் இப்ராஹிமிடம் சமர்பிக்கப்பட்டதாகவும் அதற்கு அவர் ஒப்புதல் அளித்ததாகவும் பிரதமர் அன்வார் சுட்டிக் காட்டினார்.
இறுதிநேரத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் புகார்கள் அடிப்படையற்றவை என்றும், சில தரப்பினர் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்குடன் இதை அரசியலாக்க முயன்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
நீதித்துறை மீது நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் சிலர் பொய் புகார்களை எழுப்பியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நியமனச் செயல் முடிவடையாத நிலையில், நான் பதிலளிக்க இயலாது. ஆனால் அதற்குள் விமர்சனங்கள் எழுந்தன என்று பிரதமர் அன்வார் இன்று பிரதமர் துறையின் மாதாந்திரக் கூட்டத்தின் தனது உரையில் தெரிவித்தார்.
தலைமை நீதிபதியின் நியமனம், கூட்டரசு அரசமைப்பின் 122B-ஆவது பிரிவின் கீழ் செயல்படுத்தப்பட்டதை அன்வார் ஒப்புக் கொண்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
July 31, 2025, 1:23 pm
தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்
July 31, 2025, 1:00 pm