
செய்திகள் மலேசியா
வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது : வயதான நபர் மரணம்
கூச்சிங்:
சோங், காபிட் அருகே (பத்து 24, ஜாலான் முசா காஜா) உள்ள பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தில், அதில் பயணித்த 80 வயதான பெரைன் சினாவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்ற நான்கு நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதனிடையே இறந்தவர் மீது வாகனம் கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இரவு 7.50 மணிக்கு தகவல் கிடைத்தது. சோங் தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஏழு பேர் கொண்ட குழுவினர், இரு வாகனங்களில் 90 நிமிடங்கள் பயணித்து, சுமார் 46 கி.மீ தொலைவிலுள்ள விபத்து நிகழ்ந்த பகுதியை அடைந்தனர்.
அந்தப் பகுதியில் உள்ள ஒரு மித்சுபிஷி டிரிடான் வாகனம், வழுக்கி சுமார் 10 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது
இதில் ஒரு 43 வயது நபர் காயமடைந்த நிலையில் பொதுமக்கள் உதவியுடன் கனோவிட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மற்ற மூன்று பேர் (44 முதல் 61 வயதுக்குள்) பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மீட்புப் பணிக்காக அருகிலுள்ள மரத்துறை நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டது. வாகனத்தை மீட்டெடுக்க புள்டோசர் பயன்படுத்தப்பட்டது.
விபத்து நேரத்தில் வாகனத்தை ஓட்டி இருந்தவர் 50 வயதான நபர் என்றும், அவர்கள் ஏறத்தாழமான ஏறுபாதையில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
July 31, 2025, 1:23 pm
தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்
July 31, 2025, 1:00 pm