நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிரம்புடனான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தேசியக் கொள்கையை மலேசியா தொடர்ந்து பாதுகாக்கும்: பிரதமர்

புத்ராஜெயா:

டிரம்புடனான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தேசியக் கொள்கையை மலேசியா தொடர்ந்து பாதுகாக்கும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ர்ராஹிம் இதனை கூறினார்.

அமெரிக்காவுடன் வரிவிதிப்பு பேச்சுவார்த்தைகளை எதிர்கொள்வதில் பூமிபுத்ரா கொள்கை உட்பட நாட்டின் நிலைப்பாட்டை பாதுகாப்பதில் மலேசியா சமரசம் செய்யாது.

பொருளாதார சக்தியுடனான வர்த்தகம், முதலீட்டு உறவுகளின் முக்கியத்துவத்தை நாங்கள் பாராட்டிய போதிலும்,

பேச்சுவார்த்தைகளில் ஒரு குறிப்பிட்ட எல்லைக் கோடு இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு பிரச்சினையில் அரசாங்கம் தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை எதிர்கொள்கிறது.

மேலும் இது குறித்து அமைச்சரவை பல முறை விவாதித்துள்ளது.  ஆனால் எங்களுக்கு ஒரு நிலைப்பாடு உள்ளது.  எங்களுக்கு ஒரு எல்லைக் கோடு உள்ளது.

தேசியக் கொள்கையில் தலையிட வேண்டாம் என்பதே அந்த எல்லைக் கோடாகும்.

ஆக இதனால் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் அரசாங்கம் தயாராகி வருகிறது என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset