நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அனுமதியுடன் பெஜூவாங் மாநாட்டில் கலந்து கொண்டோம்: டத்தோ குமாரராஜா

கோலாலம்பூர்:

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அனுமதியுடன் பெஜூவாங் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டோம்.

மஇகாவின் நிர்வாக செயலாளர் டத்தோ ஏடி குமாரராஜா இதனை உறுதிப்படுத்தினார்.

பெஜூவாங் கட்சியின் தேசிய பேராளர் மாநாடு நேற்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மஇகாவின் இரண்டு மூத்த தலைவர்களின் பங்கேற்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

மஇகா பொதுச் செயலாளர் டத்தோ எஸ். ஆனந்தன், மஇகா நிர்வாகச் செயலாளர் டத்தோ ஏடி குமாரராஜா ஆகிய இரு தலைவர்களும், பெஜூவாங் கட்சியின் நிறுவனர் துன் டாக்டர் மகாதீருடனான இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

பொதுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு டத்தோ ஆனந்தன், டத்தோ ஏடி குமாரராஜா ஆகிய இருவரும் பெஜூவாங் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீரை சந்தித்தனர்.

ஐடிசிசி மாநாட்டு மையத்தில் கொள்கை உரை நிகழ்த்தும்போது பெஜூவாங் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் அவர்களின் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இது பிரதிநிதிகள்,  பங்கேற்பாளர்களிடமிருந்து அரங்கம் நிறைந்த  கைதட்டலைப் பெற்றது.

மஇகாவைத் தவிர்த்து பாஸ், கெராக்கான், மூடா, எம்ஐபிபி உட்பட பல கட்சிகளின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

முன்னதாக பெஜூவாங் கட்சியின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் இம்மாநாட்டில் மஇகா பிரதிநிதிகளாக கலந்து கொண்டோம்.

மேலும் எங்களின் இந்த வருகை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரனின் அனுமதியுடன் இருந்தது என்று டத்தோ குமாரராஜா சுருக்கமான நிருபர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset