
செய்திகள் மலேசியா
தியோ வழக்கில் தகவல் கொடுப்பவருக்கு 1 மில்லியன் ரிங்கிட் வெகுமதி வழங்க வேண்டும்: அருட்செல்வம்
கோலாலம்பூர்:
முன்னாள் ஜசெக அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக்கின் மரணத்திற்கு காரணமான தரப்பினர் பற்றிய தகவல்களை வழங்கக்கூடிய எவருக்கும் 1 மில்லியன் ரிங்கிட் வெகுமதி வழங்கப்பட வேண்டும்.
பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வம் இதனை முன்மொழிந்தார்.
வெளிநாட்டில் உள்ள தனிநபர்களை வேட்டையாடுவதற்கு வழங்கப்பட்ட 10 மில்லிய ரிங்கிட்டை விட இந்த சலுகை குறைவு.
16 ஆண்டுகளுக்குப் பிறகும், தியோவின் குடும்பத்திற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
இந்த வழக்கு எளிதாக தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆகையால் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த 1 மில்லியன் ரிங்கிட் போதுமானதாக இருந்திருக்கும் என்று அவர் கூறினார்.
முன்னதாக 1 எம்டிபி ஊழலின் மூளையாக செயல்பட்ட ஜோ லோவைக் கண்டுபிடிக்க அரசாங்கம் 10 மில்லியன ரிங்கிட் வழங்க வேண்டும் என்று கெஅடிலான் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட்டின் முன்மொழிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm
எஸ்டிஆர், ரஹ்மா உதவித் தொகை திட்டங்களை அரசாங்கம் தொடரும்: பிரதமர்
July 31, 2025, 1:23 pm
தேசிய தரவு ஆணையம் விரைவில் நிறுவப்படும்: பிரதமர்
July 31, 2025, 1:00 pm