நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சிவநேசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது 

சென்னை:

தமிழ்மொழி வளர்ச்சியை உலகளவில் தொடர்ந்து முன்னெடுக்கும் இயக்கமாக பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான அ. சிவநேசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.

தமிழ்நாட்டில் பேராசிரியர் முனைவர் சங்கர் கலியன் நிறுவனர், தலைவராகவும் பேராசிரியர் முனைவர் பா.ஜான்சிராணி அவர்களை செயலாளராகவும் கொண்டு பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. 

இந்த நிறுவனத்தின் ஏற்பாட்டில்  நேற்று தொல்லியல் நோக்கில் சோழர்கள் அன்றும், இன்றும் எனும் பொருண்மையில் பன்னாட்டு தொல்லியல் மாநாடு ஆய்வு நூல் வெளியீடு, விருது வழங்குதல் நிகழ்வு வடபழனி சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இம்மாநாட்டில் சிறப்பு வருகையாளராக  பேரா மாநில சுகாதாரம், மனித வளம், தேசிய ஒருமைப்பாடு, இந்தியர் விவகாரத்துறௌ ஆட்சிக்குழு உறுப்பினர்  அ..சிவநேசனுக்கு அரசியல் களத்தில் பயணிக்கும் மக்கள் பணிக்காகவும் அயராமல் ஆற்றும் தமிழ்மொழித் தொண்டிற்காகவும் சமய தொண்டிக்கும்
 வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபட்டது.

இதனிடையே நிருபர் எஸ்.லிங்கேஸ்வரனுக்கு எழுத்து துறை தொடர்பாக விருதும் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் சிறப்பாக சமுதாய சேவையில் தன்னை அர்பணித்துக்கொண்டிருக்கும் சமுக சிந்தனையாளர் கி.மணிமாறனுக்கும் விருது வழங்கி கௌரவக்கப்பட்டனர்.

இந்திய நாட்டின் முன்னாள் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் மத்திய அமைச்சரும்  நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான  ஆ. இராசா தலைமையில் நடைபெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset