நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி புகார் தொடர்பான சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்: நூர் ஹலிசா

பெட்டாலிங் ஜெயா:

போலி புகார் அளிக்கும் தரப்பினருக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான சட்டத்தை அரசு மீண்டும் ஆய்வு 
செய்ய வேண்டும் என்று வட மலேசியப் பல்கலைக்கழக விரிவுரையாளர் Nurhazlina Mohd Ariffin தெரிவித்துள்ளார். 

தற்போது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 182-இன் கீழ் போலி புகாரளிப்பவர்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது 2000 வெள்ளி அபராதம் விதிக்கப்படுகின்றது.

இது அவர்களின் செயலுக்கான பொருத்தமான தண்டனையாக இல்லை என்று அவர் கூறினார். 

பணியில் இருக்கும் காவல்துறையினரின் நேரத்தையும் அவர்களின் வேலைகளையும் போலி புகார் நடவடிக்கை பாதிக்கின்றது. 

போலி புகார்கள் நிகழாமல் இருப்பதைத் தடுக்க தண்டனையைக் கடுமையாக்க வேண்டும் என்று பொது உளவியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நூர் ஹலிசா பரிந்துரைத்தார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் வரை கிளந்தானில் வெள்ள்ம் தொடர்பாக 107 போலி புகார் அழைப்புகள் பதிவு செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset