நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகை மூட்டம்: நாட்டின் 8 பகுதிகளில் காற்று மாசு குறியீடு 100-யைக் கடந்தது

கோலாலம்பூர்: 

இன்று காலை நிலவரப்படி புகை மூட்டத்தால் நாட்டின் 8  பகுதிகளில் காற்று மாசு குறியீடு 100-யைக் கடந்துள்ளது. 

மலாக்காவிலுள்ள அலோர் காஜா பகுதி காற்று மாசு குறியீடு 159-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்ட பகுதிகளில் இங்குத் தான் அதிகமாக புகை மூட்டமாக உள்ளது.

இதைத் தொடர்ந்து,நெகிரி செம்பிலானின் நிலாய் (158), பகாங்கின் மெந்தாகாப் (156), சிலாங்கூரின் பந்திங் (155) ஆகிய பகுதிகளிலும்  காற்று மாசு குறியீடு 100-யைக் கடந்து பதிவாகியுள்ளது.

அண்டை நாடுகளில் காட்டை அழித்து தீயை மூட்டும் சம்பவங்களினால் எல்லை தாண்டி வரும் புகைமூட்டமே காற்றின் தூய்மைக் கேட்டிற்குக் காரணமாக உள்ளதாக சுற்றுச்சூழல் இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ வான் அப்துல் லத்திப் குறிப்பிட்டுள்ளார்.

புகை மூட்டம் கடுமையானால் அதன் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சம்பந்தப்பட்ட இலாகாக்கள் திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset