நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்புக்கான வீட்டு காவல் கோரிக்கையில் அன்வார் திறந்த மனப்பான்மை – இறுதி முடிவை நீதிமன்றத்தின் வசம்

புத்ராஜாயா: 
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டு காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் அரசுக்கான கூடுதல் அறிவுறுத்தல் (royal addendum) தொடர்பாக, அம்னோ தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையைப் பற்றிய கலந்துரையாடலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் திறந்த மனப்பான்மையுடன் இருக்கிறார்.

அன்வார் கூறுகையில், “இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்றத்தின் முடிவை முன்பே எதிர்பார்த்து எதையும் செய்ய முடியாது,” என்றார்.

“அம்னோ தலைவர், துணைத் தலைவர் மற்றும் பிற முக்கிய தலைவர்களிடம் நான் கூறியது இதுதான் – விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். தேவையான விளக்கங்களை அளிக்கவும், தேவைப்பட்டால் நாட்டின் ஒற்றுமையைப் பேணும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கவும் தயாராக இருக்கிறேன்,” என்றார்.

இவ்வாறு அவர், புத்ராஜாயா அல்இஸ்திக்லால் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset