நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பக்காத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவு இன்னும் எதிர்கட்சியினர் போல் செயல்பட்டு வருகின்றனர்: MIPP கட்சி இளைஞர் பிரிவு தலைவர் ஜஸ்டின் பிரபாகரன் ஆதங்கம் 

கோலாலம்பூர்: 

பக்கத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவு இன்னும் தாங்கள் எதிர்கட்சி என்ற சிந்தனையில் செயல்பட்டு வருகின்றனர். 

அண்மையில் மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம் குறித்து அதிருப்தி தெரிவித்த நம்பிக்கை கூட்டணி இளைஞர் பிரிவு, எதிர்ப்பு பேரணியை நடத்துகின்றனர். 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி, முறையாக தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டும் தவிர எதிர்கட்சியாக செயல்பட கூடாது என்று MIPP கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் ஜஸ்டின் பிரபாகரன் கூறினார். 

பிரதமர் அன்வாரை முறையாக சந்தித்து பக்காத்தா ஹராப்பான் முறையாக தங்களின் அதிருப்தியைத் தெரிவித்திருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். 

பக்கத்தா ஹராப்பான் இளைஞர் பிரிவு பேரணியில் கலந்து கொள்ள விரும்பினால் எங்களின் அன்வார் எதிர்ப்பு பேரணியில் இணையுங்கள். இந்த பேரணி எதிர்வரும் ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset