
செய்திகள் மலேசியா
சட்டவிரோதமாக இயங்கிய பேருந்து: முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்
கோலாலம்பூர்:
கிரிக் பகுதியில் ஏற்பட்ட பயணிகள் பேருந்து விபத்தில் பலியான மாணவர்களின் மரணத்திற்கு காரணமான பேருந்து, சட்டவிரோதமாக இயங்கியது என முதல் கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் ஈடுபட்ட பேருந்தை இயக்கிய நிறுவனம் Noreen Maju Trading ஆகும். ஆனால் இந்த நிறுவனத்திற்கு "நில பொதுப் போக்குவரத்து சட்டம் 2010 "சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் உரிமம் அல்லது அனுமதி எதுவும் இல்லை. பேருந்து பயன்படுத்திய உரிமம் Kenari Utara Travel & Tours Sdn Bhd எனும் முறையான உரிமம் பெற்ற நிறுவனத்திற்குச் சேர்ந்தது.
இந்த உரிமம் முறையற்ற முறையில் மூன்றாவது தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இது சட்டத்தின் 49(1) பிரிவின் கீழ் குற்றமாகும்.
இந்த ஒழுங்கின்மை குறித்து பொது போக்குவரது துறை மேற்கொண்ட சட்ட நடவடிக்கையால் உறுதி செய்யப்பட்டது. Noreen Maju Trading நிறுவனம் உரிய சட்ட அனுமதியின்றி பேருந்து சேவையை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் விசாரணையின் போது, Nuratiqah போக்குவரது நிறுவனம் என்ற வேறு நிறுவனம் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஒரு பேருந்து ஓட்டுனருக்கான விலக்கு விண்ணப்பத்தை இணையதளம் வழியாகச் சமர்ப்பித்திருந்தது. ஆனால் அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்ட நபர், விபத்து நடந்த நேரத்தில் வண்டி ஓட்டிய நபராக இல்லையென்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்குப் பிறகும், சரிபார்ப்பு இன்றி அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டதால் – தவறான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜூன் 9ஆம் தேதி, உப்சி பல்கலைக்கழகத்தின் 42 மாணவர்கள் பயணம் செய்த பேருந்து, ஜெராந்த்தே (திரெங்கானு) பகுதியில் இருந்து தஞ்சோங் மாலிம் (பேராக்) நோக்கி பயணிக்கும்போது, கிரிக் அருகே அல்ஸா வாகனத்துடன் மோதியது. இந்த விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்குப் பிறகு, ஜூன் 11 ஆம் தேதி, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:19 pm
சரவாக் பள்ளத்தாக்கில் காணாமல்போன மரம் வெட்டுபவர் சடலமாக மீட்பு
July 18, 2025, 3:13 pm