நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் தொடர்பான கூடுதல் உத்தரவு விவகாரத்தில் அம்னோ என்ன செய்கிறது என்பதை பார்ப்போம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

நஜிப் தொடர்பான கூடுதல் உத்தரவு விவகாரத்தில் அம்னோ என்ன செய்கிறது என்பதை பார்ப்போம்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் எஞ்சிய தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க வேண்டும் என முன்னாள் மாமன்னர் கூடுதல் உத்தரவு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இந்த கூடுதல் உத்தரவு இன்று வரை செயல்படுத்தவில்லை.

இந்த உத்தரவை உடனடியாக பிரதமர் செயல்படுத்த வேண்டும் என அம்னோ வலியுறுத்தி வருகிறது.

எங்களை பொறுத்தவரையில் அம்னோ தான் இந்த விவகாரத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆக அம்னோ தொடர்ந்து என்ன செய்கிறது என்பதை பார்ப்போம் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

சிரமமான நேரத்தில் தேசிய முன்னணி கூட்டணியில் இருந்து விலக போகிறோம் என மிரட்ட வேண்டாம் என அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் கூறியுள்ளார்.

உண்மையில் யார் சிரமப்படுகிறார்கள். யார் மிரட்டுகிறார்கள் என்பது அவருக்கு தான் தெரியும்.

ஆக இவ்விவகாரத்தில் அவர் தான் விளக்கம் தர வேண்டும்.

மஇகா மத்திய செயலவை கூட்டத்திற்கு பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset