நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பை உட்படுத்திய கூடுதல் உத்தரவு விவகாரம்: அம்னோ தலைவர்களைச் சந்திக்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம் 

புத்ராஜெயா: 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கை உட்படுத்திய கூடுதல் உத்தரவு தொடர்பான விளக்கம் அளிக்க தாம் அம்னோ தலைவர்களைச் சந்திக்க தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

இந்த கூடுதல் உத்தரவு விவகாரம் ஏற்கனவே நீதித்துறை பரிபாலன அமைப்பிடம் மேற்கொள்காட்டப்பட்டுள்ளது. ஆக, நீதிமன்றத்தை முன்னோக்கி செல்லும் அதிகாரம் தமக்கு இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். 

அம்னோ தொகுதி தலைவர்கள் இந்த கூடுதல் உத்தரவு தொடர்பாக சந்திப்பு நடத்த வலியுறுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே தாம் சந்திக்கவிருப்பதாக அவர் சொன்னார். 

அம்னோ தலைவர்களைச் சந்திக்கப்போவதாக அம்னோ தேசிய தலைவர், தேசிய துணைத்தலைவர், மற்ற அம்னோ தலைவரகளிடம் தாம் தெரிவித்து விட்டதாக அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக, புத்ராஜெயாவில் உள்ள சூராவ் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset