நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உப்சி பல்கலைக்கழக மாணவர்களை உட்படுத்திய சாலை விபத்து: பேருந்து இரு மடங்கு அதிவேகமாக சென்றுள்ளது 

பெட்டாலிங் ஜெயா: 

உப்சி பல்கலைக்கழக மாணவர்களை உட்படுத்திய சாலை விபத்து அண்மையில் கிரிக் எனும் பகுதியில் நிகழ்ந்தது. 

இந்த விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் பேருந்து ஓட்டுநர் வேக கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இருப்பினும், பிரேக் செயலிழப்பு காரணமாக விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து போக்குவரத்து அமைச்சின் சிறப்பு அதிகாரிகள் குழு இன்னும் உறுதி செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டது. 

நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பைக் காட்டிலும் இந்த பேருந்து வேகமாக சென்றுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து மணிக்கு 117.6 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக விசாரணையில் தெரிய வந்தது. 

கடந்த ஜூன் 9ஆம் தேதி நிகழ்ந்த இந்த கோர விபத்தில் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் பலியானார்கள்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset