நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனம்: நீதித்துறையில் தமது தலையீடு இல்லை என்று நிரூபணம் ஆகியுள்ளது: டத்தோஶ்ரீ அன்வார் கருத்து 

புத்ராஜெயா: 

நாட்டின் புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதால் நீதித்துறையில் தனது தலையீடு இல்லை என்பது இங்கு நிரூபணம் ஆகியுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

நீதித்துறையில் தனக்கு வேண்டியவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்க தனது தலையீடு இருக்கிறது என்று பிரதமர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அன்வார் விளக்கினார். 

தற்போது புதிய தலைமை நீதிபதியின் நியமனத்தால் நீதித்துறை சிறந்த முறையில் வழிநடத்தப்படும் என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹி ம்நம்பிக்கை தெரிவித்தார். 

நாட்டின் 17ஆவது தலைமை நீதிபதியாக நீதியரசர் வான் அஹ்மத் ஃபாரிட் நியமிக்கப்பட்டார். அவரின் பதவியேற்பு சடங்கு ஜூலை 28ஆம் தேதி, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முன்னிலையில் நடைபெறவிருக்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset