நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

6 மாத குழந்தை உயிரிழப்பு: குழந்தை பராமரிப்பாளருக்கு தடுப்பு காவல்

மலாக்கா: 
பாடாங் டெமுவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் ஆறுமாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய ஒரு பெண் பணியாளர் 2 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக குற்றவியல் வழக்க நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117-ன் கீழ், விசாரணை அதிகாரியின் கோரிக்கையை ஏற்று நீதிபதி என். சிவசங்கரி 2 நாட்கள் தடுப்பு காவலுக்கு அனுமதி வழங்கினார்.

குழந்தை செவ்வாய்க்கிழமை அன்று முகம் கீழே திரும்பிய நிலையில் மெத்தையின் மேல் உயிரற்ற நிலையில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலாக்கா தெங்கா மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவிக் கண்காணிப்பாளர் கிறிஸ்டோபர் பதீத் இதை உறுதி செய்தார். இந்த வழக்கு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a) கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset