
செய்திகள் மலேசியா
சரவாக் பள்ளத்தாக்கில் காணாமல்போன மரம் வெட்டுபவர் சடலமாக மீட்பு
பெலகா:
சரவாக்கில் கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போனதாக கருதப்பட்ட 49 வயது மரம் வெட்டும் நபர் ஹிமாங் லிசாங்கின் உடல், இன்று காலை கெம் நிபாங் அருகேயுள்ள பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்டது.
ஜூலை 15 ஆம் தேதி, கெம் நிபாஙில் இருந்து அண்டிங் நகரம் நோக்கி பொருட்கள் வாங்க செல்ல வாகனத்தில் புறப்பட்ட ஹிமாங், பின்னர் திரும்பவில்லை. தொடர்பு கிடைக்காததால், அவர் பணியாற்றும் நிறுவனம் தனியாக தேடுதல் பணியில் இறங்கியது.
கெம் அபிட் முதல் கெம் நிபாங் வரை உள்ள மரம் வெட்டும் பாதையில் தேடியும் தகவல் எதுவும் கிடைக்காத நிலையில், அவர்கள் பெலகா மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர்.
அதன்பின், போலீசாரிடமிருந்து தகவல் பெற்ற பெலகா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், இயக்கத் தளபதி வில்ல்டியோ டுமாட் தலைமையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
இன்று காலை 9.30 மணியளவில் ஹிமாங் பயணித்த ப வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் அருகிலேயே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அவரது சடலமும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைக்காக அவரது உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm
சட்டவிரோதமாக இயங்கிய பேருந்து: முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்
July 18, 2025, 3:13 pm
6 மாத குழந்தை உயிரிழப்பு: குழந்தை பராமரிப்பாளருக்கு தடுப்பு காவல்
July 18, 2025, 3:02 pm