நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெரிக் பேருந்து விபத்தின் விசாரணை அறிக்கை: வரம்பை மீறி இரண்டு மடங்கு வேகமாக பேருந்து சென்றுள்ளது

கெரிக்:

நிர்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாட்டை விட இரண்டு மடங்கு பேருந்தைச் செலுத்தியதே விபத்திற்கான காரணம் என்று கெரிக் பேருந்து விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேகமாகப் பேருந்தைச் செலுத்திய ஓட்டுநர் வளைவான பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சம்பந்தப்பட்ட பேருந்து மணிக்கு 117.6 கிமீ வேகத்தில் பயணித்திருக்கலாம் என்றும், இது நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பான மணிக்கு 60 கிமீ வேகத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இருப்பினும், பேருந்தின் பிரேக் அமைப்பு செயலிழந்ததா என்பதை போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புப் பணிக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பேருந்து இடதுபுறமாக கவிழ்ந்து சாலை தடுப்பில் மோதியது.

பின்னர் தடுப்பு கம்பி பேருந்துக்குள் நுழைந்து உள்ளே இருந்த மாணவர்களுக்கு பலத்த காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தியது.

கடந்த ஜூன் 9-ஆம் தேதி திரெங்கானுவிலிருந்து தஞ்சோங் மாலிம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கிரிக் அருகே விபத்துக்குள்ளானது. 

இதில் 15 உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset