
செய்திகள் மலேசியா
மலாயாப் பல்கலைக்கழகத்தின் 65ஆவது பட்டமளிப்பு விழா: நவம்பர் 29 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது
கோலாலம்பூர்:
மலேசியாவின் முதல்நிலை பொதுப் பல்கலைக்கழகமாக விளங்கும் மலாயாப் பல்கலைக்கழகம் அதன் 65ஆவது பட்டமளிப்பு விழா குறித்த அதிகாரப்பூர்வ தகவலைத் தற்போது வெளியிட்டுள்ளது.
அவ்வகையில், எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை மலாயாப் பல்கலைக்கழகத்தின் 65ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.
துங்கு வேந்தர் அரங்கில் நடைபெறவிருக்கும் இந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் 12,000 பட்டதாரி மாணவர்கள் தங்களின் கல்வி பட்டங்களைப் பெறுகின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பட்டம் பெறவிருக்கும் மாணவர்கள் யாவரும் முறையாக தங்களின் பயணங்களைத் திட்டமிட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு மாணவர்கள் UMCONVO எனும் அகப்பக்கம் வாயிலாக வலம் வந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மலாயாப் பல்கலைக்கழகம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 1, 2025, 8:13 am
மலேசிய பொருள்கள்மீதான தீர்வை 25%இலிருந்து 19%ஆக குறைக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
August 1, 2025, 7:04 am
மலேசியாவில் போலி 100 ரிங்கிட் நோட்டுகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm