
செய்திகள் மலேசியா
ஜொகூரில் பள்ளி வேன் தடம் புரண்டது; தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் காயம்
ஜொகூர்பாரு:
பள்ளி வேன் தலைக்கீழாக தடம் புரண்ட சம்பவத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இங்குள்ள ஜாலான் அப்துல் சமத்தில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 மாணவர்கள் கை, விரல்கள் உடைந்து காயம் அடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி மாணவர்களாவர்.
மற்றவர்கள் அமினுடி பாக்கி, முகமது காலித் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் ஆவர்.
இதனை மாநில கல்வி இலாகா, தகவல் குழுத் தலைவர் அஸ்னான் தமின் உறுதிப்படுத்தினார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பார்க்க சுல்தானா அமினா மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.
பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து மருத்துவமனை, பள்ளியிலிருந்து சமீபத்திய தகவல்களை பெற்றேன்.
மேலும் அவர்களுக்கு சிறந்த சிகிச்சை, சுகாதார கண்காணிப்புகள் வழங்கப்படும்.
குறிப்பாக அனைத்து மாணவர்களின் நிலையையும் நான் அவ்வப்போது கண்காணிப்பேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 1, 2025, 8:13 am
மலேசிய பொருள்கள்மீதான தீர்வை 25%இலிருந்து 19%ஆக குறைக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
August 1, 2025, 7:04 am
மலேசியாவில் போலி 100 ரிங்கிட் நோட்டுகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm