நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் போலீஸ்படையின் இடைக்காலத் தலைவராக ஜைனி நியமனம்

ஷா ஆலம்:

சிலாங்கூர் மாநிலப் போலீஸ்படையின் இடைக்காலத் தலைவராகத் துணை ஆணையர் முஹம்மத் ஜைனி அபு ஹசான் ஜைனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன், முஹம்மத் ஜைனி சிலாங்கூர் மாநிலப் போலீஸ்படையின் துணை தலைவராகப் பணியாற்றினார்.

ஜூலை 21 முதல் மத்தியப் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (NCID) இயக்குநராக அம்மாநிலத்தின் போலீஸ்படை தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் பதவி உயர்வு பெற்ற நிலையில் முஹம்மத் ஜைனி இடைக்காலத் தலைவராக செயல்படவுள்ளார். 

இன்று நடைபெற்ற பதவி ஒப்படைப்பு விழாவில் மத்திய காவல் மேலாண்மைத் துறை இயக்குநர் டத்தோ அப்துல் அஜீஸ் அப்துல் மஜித் கலந்து கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset