நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடையாள அட்டை விண்ணப்பத்தின் போது போலி தகவலைக் கொடுத்த முதியவருக்கு அபராதம் விதிப்பு 

குவாந்தான்:

தேசிய பதிவுத்துறையில் அடையாள அட்டை விண்ணப்பத்தின் போது போலி தகவலை வழங்கியதாக முதியவர் மீது இங்குள்ள குவாந்தான் மாஜிஸ்திரெட் நீதிமன்றம் 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 

அடையாள அட்டை விண்ணப்பத்தின் போது தாம் போலி தகவல்களை வழங்கியதாக தனக்கு எதிரான குற்றத்தை அந்த முதியவர் ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. 

குற்றஞ்சாட்டப்பட்ட 65 வயதான அப்டா சையத் தனக்கு எதிரான குற்றத்தை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி தெங்கு எலியானா துவான் கமாருஸமான் முன்னிலையில் ஒப்புக்கொண்டார். 

விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கட்ட தவறினால் சம்பந்தப்பட்ட முதியவர் 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெங்கு எலியானா குறிப்பிட்டார். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் 1990 தேசிய பதிவு விதிமுறைகள் செக்‌ஷன் 25(1)(b) இன் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டு சுமத்தப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset