நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் அரசு ஊழியர்கள் உட்பட 25 பேர் கையூட்டு வழக்கில் கைது

கோத்தா பாரு: 

கடந்த 18 மாதங்களில் கிளந்தான் மாநிலத்தில் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் 25 பேர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 14 பேர் அரசு ஊழியர்கள். மத்திய மற்றும் உள்ளூர் நிர்வாகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நடவடிக்கைகளில் சிக்கியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் 17 பேர் கைது செய்யப்பட்டதுடன், 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் பதிவான அதிகபட்ச லஞ்சத் தொகை RM380,000 ஆக இருந்தது. இந்த ஆண்டில் இதுவரை பதிவான உயர்ந்த தொகை RM100,000 ஆகும். குறைந்தபட்ச லஞ்சம் கடந்த ஆண்டு RM50 என்றும், இந்த ஆண்டு RM100 என்றும் குறிப்பிடப்படுகிறது என கிளந்தான் எம்ஏடிடி இயக்குநர் அஸ்மின் யுசுப் கூறினார்.

2024 ஆம் ஆண்டு மட்டும்  கிளந்தான் எம்ஏசிசி  அலுவலகம் 29 விசாரணை அறிக்கைகள் திறந்துள்ளன. இதில் 15 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 10 விசாரணை அறிக்கைகள் தொடங்கப்பட்டு, மூன்று பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமூகத்தில் நேர்மையை நிலைநாட்டும் முயற்சியாக, ஊழலை ஒழிக்க சட்ட நடவடிக்கைகள் மட்டுமின்றி, பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஊக்குவிக்கவேண்டும் என்று அஸ்மின் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset