நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாமன்சாரா டாமாய்  ஓம் ஶ்ரீ கைலாய நாதர் ஆலய கட்டுமான திட்டம்; பொதுமக்களும் நல்லுள்ளங்களும் உதவ வேண்டும்: தர்மா

கோலாலம்பூர்:

டாமன்சாரா டாமாய் ஓம் ஶ்ரீ கைலாய நாதர் ஆலய கட்டுமான திட்டத்திற்கு பொதுமக்களும் நல்லுள்ளங்களும் உதவ வேண்டும்.

ஆலயத் தலைவர் தர்மா இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

டாமன்சாரா டாமாயில் 500க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதில் ஆலயங்கள் ஏதும் இல்லை.

ஆக அருகாமையில் உள்ள ஆலயம் கூட்ட 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

இதன் அடிப்படையில் தான் டாமன்சாரா டாமாயில் ஓம் ஶ்ரீ கைலாய நாதர் ஆலயத்தை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆலயம் கட்டுமான பணிகளுக்கு எம்பிபிஜே அனுமதியும் வழங்கியுள்ளது. இரண்டு மாடிகளாக இவ்வாலயம் கட்டப்படவுள்ளது.

கிட்டத்தட்ட 2.5 மில்லியன் ரிங்கிட் செலவில் இவ்வாலயம் கட்டப்படவுள்ளது. இவ்வளவு பெரிய தொகையில் ஆலயம் கட்டுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும்.

இதனால் தற்காலிகமாக பாலாலயம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது என்று தர்மா கூறினார்.

ஓம் ஶ்ரீ கைலாய நாதர் ஆலயம் கட்டுவதற்கு பொதுமக்கள், நல்லுள்ளங்களின் ஆதரவை ஆலய நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

இதனால் நிதி திரட்டும் நோக்கில் விருந்துபரிப்பு விழாவை ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணி முதல் கம்போங் பாரு சுங்கைபூலோ சீனப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஆக அனைவரும் திரளாக வந்து இவ்வாலய கட்டுமான பணிக்கு உதவ வேண்டும் என ஆலயத் துணைத் தலைவர் தீபன் கேட்டுக் கொண்டார்.

இவ்வாலயம் குறித்த மேல்விவரங்களுக்கு தர்மா 0192993638, தீபன் 01463223655 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset