நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாமன்னரின் கூடுதல் உத்தரவை பிரதமர் உடனடியாக செயல்படுத்த வேண்டும்: 145 அம்னோ தொகுதித் தலைவர்கள் வலியுறுத்து

கோலாலம்பூர்:

மாமன்னரின் கூடுதல் உத்தரவை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

சபா உட்பட நாடு முழுவதும் உள்ள  145 அம்னோ தொகுதித் தலைவர்கள் இதனை வலியுறுத்தினர்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் உத்தரவு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இந்த விவகாரத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

நாட்டின் 16ஆவது மாட்சிமைத் தங்கிய மாமன்னரால் இது அங்கீகரிக்கப்பட்டது.

எனவே அதை செயல்படுத்துவதை தாமதப்படுத்த இனி எந்த காரணமும் இல்லை என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கூடுதலாக, நாடு முழுவதும் இன்னும் கூடாத அனைத்து அம்னோ தொகுதித் தலைவர்களும், அந்தந்த பிரிவு மாநாடுகளில் துணை உரை தொடர்பான பிரச்சினை குறித்து ஒரு சிறப்புத் தீர்மானத்தைக் கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ளனர்.

மலாய் ஆட்சியாளர்களின் நிறுவனத்தைப் பாதுகாப்பதிலும், அனைவருக்கும் நீதி என்ற கொள்கையை நிலைநிறுத்துவதிலும் கட்சியின் ஒற்றுமைக்கு சான்றாக இந்தப் பிரேரணை முக்கியமானது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset