நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள் விவகாரம் கைவிடப்பட்ட சம்பவம் அல்ல: போலிஸ்

சிரம்பான்:

சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள் விவகாரம் கைவிடப்பட்ட சம்பவம் அல்ல.

சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் முகமது ஹட்டா சே டின் இதனை உறுதிப்படுத்தினார்.

நெகிரி செம்பிலானில் உள்ள சிரம்பான் 2, கார்டன் அவென்யூ அருகே சாலையோரத்தில் இரண்டு  பிள்ளைகள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக ஊடங்களை வைரலாக பரவியது.

ஊடகவாசிகளின் கருத்துப்படி சம்பந்தப்பட்ட இரண்டு பிள்ளைகளையும் பெற்றோர் மீண்டும் சிரம்பான் 2  போலிஸ் நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்றதாக கூறப்பட்டது.

ஆனால் உண்மையில் அப்பிள்ளைகள்  சாலையோரத்தில் கைவிடப்படவில்லை.

மாறாக தந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது மூத்த சகோதரி தனது தங்கையை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும், தந்தையுடன் ஒரு புகைப்படமும் பதிவேற்றப்பட்டது, இது அவர்கள் காவல் நிலையத்தில் இருந்தபோது எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset