நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வாருக்கு எதிரான' பேரணி: 15,000 பேர் பங்கேற்கலாம்; போலீசார் தயார்

கோலாலம்பூர்:
 பிரதமர் பதவிலிருந்து டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விலக வேண்டுமென்பதை வலியுறுத்தும் 'துரொன் அன்வார்'  எனும் மக்கள் பேரணி ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது, அதில் 10,000 முதல் 15,000 பேர் வரை பங்கேற்கலாம் என போலீசார் கணிக்கின்றனர்.

பேரணியின் ஏற்பாட்டாளர்கள், டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு முன்கூட்டியே தகவல் அளித்துள்ளனர் என 
கோலாலம்பூர் போலீஸ் இணை நிர்வாகக்  தலைவர் டத்தோ முகமட் யூசுப் ஜான் முகமட் கூறினார்

பேரணியின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலனை உறுதி செய்ய, 2,000க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த நாளில் களத்தில் இருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset