நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் போலீஸ் தலைவராக ஹூசேன் ஓமாரின் சேவை அளப்பரியது: அமிருடின் ஷாரி 

ஷா ஆலம்:

சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விரைவில் விடைபெறவிருக்கும் டத்தோஸ்ரீ ஹூசேன் ஓமார் கானுக்கு அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  தனது பாராட்டுகளையும் நன்றியையும் கூறினார்.

புக்கிட் அமான் போதைப் பொருள் குற்ற விசாரணைத் துறையின் இயக்குநராக விரைவில் பொறுப்பேற்கவிருக்கும் அவருக்கு அமிருடின் ஷாரி வாழ்த்தும் தெரிவித்தார். 

சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் வழங்கிய சிறப்பான சேவைக்கு மாநில அரசின் சார்பில் தாம் மனப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமிருடின் குறிப்பிட்டார். 

மாநிலப் போலீஸ் தலைவராக ஹூசேன் பணியாற்றிய ஈராண்டு காலத்தில் குறிப்பாக எல்மினா விமான விபத்து மற்றும் புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீவிபத்து போன்ற பேரிடர்களின் போது மாநில அரசுக்கும் காவல் துறைக்கும் இடையே அணுக்கமான உறவு நிலவி வந்ததை அமிருடின் தனது முகநூல் பக்கத்தில் நினைவுக் கூர்ந்தார்.

எம்.எச்.17 விமான விபத்து தொடர்பான தடயவியல் விசாரணைக் குழுவில் பங்கேற்பு உட்பட காவல் துறையில் உள்ள பரந்த அனுபவம் ஹூசேன் ஏற்கவுள்ள புதிய பதவிக்கு பெரும் பயனுள்ளதாக விளங்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஜூலை 17-ஆம் தேதியுடன் எம்.எச்.17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்து 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

இந்தப் பேரிடர் தொடர்பான தனது அனுபவத்தை ஹூசேன் ஒரு முறை தன்னுடன் பகிர்ந்து கொண்டதையும் அமிருடின் தனது பதிவில் பகிர்ந்துள்ளார். 

மரணமடைந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக விமானம் விழுந்த இடத்திற்கு அனுப்பப்பட்ட போலீஸ் தடயவியல் நிபுணர்கள் குழுவில் ஹூசேனும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என அமிருடின் அந்தப் பதவில் கூறியுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset