நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போன 17 வயது இளம்பெண் கோலாலம்பூரில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

ஜொகூர் பாரு:

காணாமல் போனதாகக் கூறப்பட்ட 17 வயது இளம்பெண், R Sue Farieda கோலாலம்பூரில் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை இஸ்கந்தர் புத்ரி மாவட்டக் காவல்துறைத் தலைவர் எம். குமரசன் உறுதிப்படுத்தினார்.

அந்த இளம்பெண் வீட்டில் தாயாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணம் வீட்டை விட்டு வெளியேறியதாக நம்பப்படுவதாக அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை, 17 வயது  இளம்பெண் திங்கள்கிழமை முதல் காணாமல் போனதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

 R Sue Farieda  மாலை 4 மணியளவில் காணாமல் போனதாகவும், கடைசியாக Gelang Patah-வில் உள்ள ஒரு உணவகத்தில் காணப்பட்டதாகவும் எம். குமரசன் தெரிவித்தார்.

அவரது 51 வயது தாய் இளம்பெண்ணைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset