நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி விசாக்களைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்த 7 ஆப்கானிஸ்தான் நாட்டினர் கைது

செப்பாங்:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1 இல் போலி விசாக்களைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற ஏழு ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஐந்து பெரியவர்கள், இரண்டு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரண்டு தனித்தனி குழுக்களாக பிரிந்து வந்தது அடையாளம் காணப்பட்டது.

அவர்கள் அனைவரும் 15 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், உஸ்பெகிஸ்தானில் இருந்து பெறப்பட்டதாக நம்பப்படும் போலி விசாக்களைப் பயன்படுத்தியதாகவும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு ஆணையம் (AKPS) தெரிவித்துள்ளது.

ஈரானில் இருந்து தப்பித்து மலேசியா வந்துள்ள 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விரைவான நடவடிக்கை, நாட்டின் எல்லைப் பாதுகாப்புக் கட்டுப்பாடு மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதை உறுதி செய்வதில் AKPS இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset