நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க தூதர் வேட்பாளர் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க இன்னும் கால அவகாசம்  உள்ளது: முஹம்மது ஹசான்

கோலாலம்பூர்:

அமெரிக்க தூதர் வேட்பாளர் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது.

வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மது ஹசான் இதனை கூறினார்.

ஆஸ்திரேலிய-அமெரிக்க செல்வாக்கு மிக்க நிக் ஆடம்ஸ் மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

இருந்தாலும் இது குறித்து அவசரப்பட்டு  கருத்து தெரிவிக்க முடியாது.

காரணம் ஆடம்ஸின் நியமனம் இன்னும் அமெரிக்க செனட்டால் உறுதிப்படுத்தப்படவில்லை.

நிக் ஆடம் தொடர்பான பிரச்சினை இன்னும் அமெரிக்க செனட்டில் கொண்டு வரப்படவில்லை. அவர்கள் அதைச் செய்யட்டும் என்று அவர் கூறினார்.

கடந்த ஜூலை 11 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக பணியாற்ற ஆடம்ஸை பரிந்துரைத்ததாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset