நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழுக்கு கவிக்கோ அப்துர் ரஹ்மான் ஆற்றிய சேவை  இன்று கடல் கடந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்: 

தமிழுக்கு கவிக்கோ அப்துர் ரஹ்மான் ஆற்றிய சேவை  இன்று கடல் கடந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

உலகின் மூத்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மலாயா பல்கலைக்கழகம் விளங்கி வருகிறது.

இப்பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் கவிக்கோ அப்துர் ரஹ்மான் நினைவு ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை, மலேசிய இஸ்லாமிய அறவாரியம் முயற்சியில் இந்த ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாடமி விருது பெற்ற கவிக்கோர் அப்துர் ரஹ்மானுக்கு இங்கு ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது பெருமையளிக்கிறது.

மேலும் தமிழ் கூறும் நல்லுலகம் இதற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.

மேலும் தமிழனின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கய கவிக்கோர் அப்துல் ரஹ்மான் ஆகப் பெரும் படைப்புகளை எழுதி குவித்த கவிஞர் ஆவார்.

படைப்பிற்கும் படைப்பாளிக்கும் மரணம் இல்லை என்பதற்கு உன்னத சான்று இன்றைய நிகழ்ச்சியாகும். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை.

அவ்வகையில் தமிழுக்கு கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஆற்றிய சேவை இன்று கடல் கடந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset