
செய்திகள் மலேசியா
கிளந்தானில் ஓரின சேர்க்கை (Gay) விருந்து: மாநில மரியாதையை களங்கப்படுத்திய செயல்: அம்னோ
கோத்தா பாரு, ஜூலை 17:
கிளந்தானில் கடந்த மாதம் நடைபெற்றதாக கூறப்படும் ஓர் இன சேர்க்கை (‘Gay’) விருந்தை கிளந்தான் அம்னோ கடுமையாக கண்டித்துள்ளது.
அம்னோ கிளந்தான் துணைத் தகவல் தலைவர் நூர் ஹரிரி முகமட் நூர் கூறுகையில், இது மாநிலத்தின் நற்பெயரை களங்கப்படுத்தும் ஒரு களஞ்செயலாகும் என தெரிவித்தார்.
அவர் மேலும், “போதைப்பொருள் பழக்கத்தின் காரணமாக இளைஞர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு, இவ்வகைய அருவெறுப்பான சம்பவங்கள் உருவெடுத்துள்ளன. இது கிளந்தானின் மதிப்பை கெடுக்கும் செயல்” என்றார்.
இந்த சம்பவம் கடந்த மாதம் ஜாலான் கெமுமின் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் நடைபெற்றது. பனிரெண்டு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த விருந்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக நம்பப்படுகிறது.
பொதுமக்களிடம் கிடைத்த தகவலையும் போலீசார் செய்த உளவுத்தகவலையும் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், 20 வயதிலிருந்து 30 வயதுக்கு இடைப்பட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். நிகழ்விடத்தில் நூற்றுக்கணக்கான காமச்சத்து மருந்துகள் மற்றும் HIV தடுப்பு மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அனைவரும் ஒருங்கிணைந்து போதை மற்றும் ஒழுக்கமற்ற செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்ப்பினர்கள் சும்மா கைகளை தூக்கிக் கொள்வதற்குப் வெறுமனே இருப்பதற்குபதிலாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 5:21 pm
2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இளைஞர் வயது வரம்பு 30 ஆகக் குறைப்பு: ஹன்னா இயோ
July 17, 2025, 4:48 pm
பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
July 17, 2025, 4:36 pm
மலேசிய திறன் சான்றிதழ் வாயிலாக திவேட் பயிற்சிக்கான புரட்சி தொடரும்: ஸ்டீவன் சிம்
July 17, 2025, 4:35 pm
அனைவரும் கோலாலம்பூர் நகரத்தின் தூய்மையைப் பராமரிக்க வேண்டும்: ஜலிஹா முஸ்தாஃபா
July 17, 2025, 3:52 pm