நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய பொருளாதார மாநாட்டின் பரிந்துரைகள் பிரதமர், அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்: டத்தோ ஏடி குமாரராஜா

கோலாலம்பூர்:

தேசிய பொருளாதார மாநாட்டின் பரிந்துரைகள் பிரதமர், அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ ஏடி குமாரராஜா இதனை கூறினார்.

தேசிய வர்த்தக தொழிலியல் சம்மேளத்தின் ஏற்பாட்டில் இம்மாநாடு தலைநகரில் நடைபெறுகிறது.

கிட்டத்தட்ட 700 பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

பல்வேறு தலைப்புகளில் சிறப்பு கலந்தாய்வுகள் இதில் இடம் பெற்றிருந்தன.

இம்மாநாட்டின் முடிவில் கலந்தாய்வுகளின் பரிந்துரைகள் அனைத்தும் முறையாக ஒருங்கிணைக்கப்படும்.

இந்த பரிந்துரைகள் அனைத்தும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

குறிப்பாக 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பிரதமர் மக்களவையில் தாக்கல் செய்வார்.

அந்த வரவு செலவு திட்டத்தில் தேசிய பொருளாதார மாநாட்டின் பரிந்துரைகள் இடம் பெற வேண்டும்.

இதுவே இம்மாநாட்டின் நோக்கம் என்ற டத்தோ ஏடி குமாரராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset